Thu. Sep 17th, 2026

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வில் அனைவருக்கும் அழைப்பு

தியாக தீபம் திலீபனின் 32ஆவது நினைவேந்தல் நிகழ்வுகள் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயத்தில் இடம்பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஆரம்ப நாள் நிகழ்வுகள் நாளை மறுதினம் 15.09.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும்.
16.09.2019 – 25.09.2019 ஆம் திகதி வரையான நிகழ்வுகள் தினமும் காலை 9.00 மணிக்கு நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இறுதி நாள் நிகழ்வுகள் 26.09.2019 ஆம் திகதி தியாக தீபம் வீரச்சாவடைந்த நல்லூரின் வடக்கு வீதியில் காலை 10.48 மணிக்கு ஆரம்பமாகும்.
எம் தேசத்திற்காக மெழுகாய் தன்னை உருக்கி தன்னுயிரை இம் மண்ணுக்காய் ஈகம் செய்த மாவீரனை நினைவு கூரும் நிகழ்வில் அனைத்துத் தமிழ் மக்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றனர் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினர்

About The Author

Share This:

Leave a Reply