Sat. Feb 15th, 2025

திடீரென இன்று ஊடகங்களை சந்தித்த அமைச்சர் சஜித், வேட்பாளர் விருப்பு கடிதத்தை ஒப்படைத்ததாக தெரிவிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச இன்று காலை .அமைச்சர் மங்கள சமவீரவின் இல்லத்தில் ஊடங்கங்களை சந்தித்திருந்தார். இந்த ஊடக சந்திப்பில் ஐக்கிய தேசிய கட்சியின் அமைச்சர்களான மங்கள சமரவிர, மலிக் சமரவிக்ரம, கபீர் ஹாஷிம், ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் சந்திரானி பண்டார ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த ஊடக சந்திப்பில் பேசிய அமைச்சர் சஜித், ஜனதிபதி தேர்தலில் தான் போட்டியிட விரும்புவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் நேற்றைய தினம் கடிதம் ஒன்றை கையளித்ததாகவும் , தற்பொழுது ஏற்பட்டுள்ள ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பான பிரச்சினைக்கு கட்சியின் உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பை நடாத்தி வேட்பாளரை தெரிவு செய்யுமாறும் , இது தொடர்பாக கட்சியின் மத்தியக்குழுவை உடனடியாக கூடுமாறு கேட்டுக்கொண்டதாகவும் கூறினார்.

எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கூரிய சகல தகுதிகளும் தனக்கு இருப்பதாகவும் அதற்கான மக்களாணை தனக்கு உள்ளதாகவும் கூறினார்
மேலும் தெரிவித்த அவர், ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக தான் களமிறங்க வேறு கட்சிகளின் நிபந்தனைகளுக்கு அடி பணிந்து ஒரு போதும் செல்ல மாட்டேன் எனவும் கூறினார். இத மூலம் இவரது வேட்பாளர் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைபாட்டை இங்கு குறிப்பிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்