திக்கம் வீதியில் அமைந்துள்ள பிரதீஸ் ஹாட்வெயாரில் களவு
வதிரி திக்கம் வீதியில் அமைந்துள்ள ஹாட்வெயரில் இரண்டு லட்சம் பெறுமதியான வயர் மற்றும் மின்சார வேலை செய்யும் பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக நெல்லியடி பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளது.
வதிரி திக்கம் வீதியில் அமைந்துள்ள பிரதீஸ் ஹாட்வெயாரிலேயே நேற்று திங்கட்கிழமை இரவு திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறியப்படுகிறது.
குறித்த ஹாட்வெயர் உரிமையாளர் இன்று செவ்வாய்கிழமை காலை கடையை திறந்த போது கூரை சீற் விலகி இருப்பதை அவதானித்துள்ளார்.
அதன் பின்னர் பொருட்களை சரிபார்த்த போது வயர் மற்றும் மின்சார வேலைக்கு பயன்படுத்தும் பொருட்கள் களவாடப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பாக நெல்லியடி பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.