Fri. Mar 21st, 2025

திக்கம் வடிசாலை சுவர் வீழ்ததில் ஒருவர் படுகாயம்

திக்கம் வடிசாலை சுவர் வீழ்ததில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கொற்றாவத்தைப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்ட திக்கம் வடிசாலையின் பின்புறச் சுவர் தற்போது பெய்துவரும் மழை காரணமாக வீழ்தந்துள்ளது. மோட்டார் சையிக்கிளில் குறித்த வீதியூடாக பயணித்த கொற்றவத்தை இளைஞரின் காலின் மீது வீழ்ந்துள்ளது. இதில் காயமடைந்த இளைஞர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த வீதியூடாக பாடசாலை மாணவர்கள், வயோதிபர்கள் எனப் பலரும் இவ்வீதியைப் பாவித்துவருவது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்