Fri. Mar 21st, 2025

தாய் தின்ற பிள்ளைகள் என்னும் சுனாமி நினைவு காணொளி பாடல் வெளியீடு

தாய் தின்ற பிள்ளைகள் என்னும் சுனாமி நினைவு காணொளி பாடல் இன்று வெளியிடப்பட்டது.
ஆழிப்பேரலையின் 20 ஆண்டுகளின் நிறைவையொட்டி ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளின் நினைவாக தாயகம் Mediaவின் தயாரிப்பில் தாய் தின்ற பிள்ளைகள் என்னும் காணொளி பாடல் இன்றையதினம் வெளியிடப்பட்டது..
வெளியிடப்பட்ட பாடலானது இன்றையதினம் யாழ். வடமராட்சி கிழக்கு உடுத்துறை சுனாமி துயிலுமில்லத்தில் அறிமுகத்துடன் ஒலிபரப்பப்பட்டதோடு மேலும் பல சுனாமி துயிலுமில்லங்கள் மற்றும் சுனாமி பொது நினைவிடங்களிலும் ஒலிபரப்பப்பட்டதுடன்
காணொளி பாடலானது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுவருதும் குறிப்பிடத்தக்கது.
காணொளி பாடலை தாயகம் தொலைக்காட்சி முகநூல் தளம் மற்றும் Voice Of VJ என்னும் வலையொளி தளம் என்பவற்றில் பார்வையிட முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்