Sat. Dec 7th, 2024

தாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

மஸ்கெலியா ஸ்டொகம் தோட்டத்தில் நேற்றையதினம் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர் 43 வயதுடைய ராமு மகாலெட்சுமி என்று பொலிஸார் தெரிவித்தனர். இவருக்கு மூன்று ஆண் குழந்தைகள் இருப்பதாகவும் , சம்பவம் இடம்பெற்ற நேரம், வீட்டில் முதியவர் ஒருவரும் கடைசி குழந்தையும் வீட்டில் இருந்ததுடன், அவர்கள் நோய்வாய்ப்பட்ட நிலையில் உறக்கத்தில் இருந்ததனால் குறித்த பெண் தூக்கிட்டு கொண்டதை அவதானிக்கவில்லை என்று பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்கள்
பிரேத பரிசோதனைக்காக குறித்த பெண்ணின் சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்