தாயிலிருந்து குழந்தைக்கு எச்ஐவி பரவுதல் முற்றாக இலங்கையில் வெற்றிகரமாக தடை செய்யப்பட்டுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது
தாயிலிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவுவதை இலங்கையில் முற்றாக கட்டுபடுத்தப்பட்டுள்ளதாக லக சுகாதார அமைப்பு (WHO) கண்டறிந்துள்ளது என்று தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டம் அறிவித்துள்ளது.
இதற்கான சான்றிதழ் 2019 ஆம் ஆண்டில் இறுதியில் உ லக சுகாதார அமைப்பால் வழங்கப்படவிருக்கின்றது , என்று தேசிய எஸ்.டி.டி / எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் துணை தலைவர் டாக்டர். லிலானி ராஜபக்ஷ தெரிவித்தார்
கர்ப்பம், பிரசவம் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் போது எச்.ஐ.வி உடன் வாழும் ஒரு பெண்ணில் எச்.ஐ.வி-யிலிருந்து வைரஸ் குழந்தைக்கு பரவுவது தற்பொழுது இலங்கையில் இல்லாது ஒழிக்கப்படுள்ளது ஒரு சாதனையாகும் என்றும் அவர் தெரிவித்தார்