தாயாரின் சடலத்துடன் காணாமல் போனநபர் – தேடுதல் நடவடிக்கையில் பொலிஸார்
விக்டன் தோட்டத்தில் தனது தாயாரின் சடலத்துடன் காணாமல் போன நபரை தேடும் நடவடிக்கையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
குறித்த நபரின் தாயார் 81 வயதுடையவர் என்றும் அவர் சிலநாட்களுக்கு முன்னர் மரணமடைந்துள்ளார்.
இந்த நிலையில் தயாரது இறுதிசடங்கை செய்வதற்கான நிதிவசதியின்மை காரணமாக, அவரது சடலத்தை காட்டில் எறியபோவதாக தெரிவித்து, அவரது மகன் முச்சக்கர வண்டி ஒன்றில் சடலத்தை ஏற்றிச் சென்றுள்ளார்.
இதன் பின்னர் ஒருவார காலமாக அவர் குறித்த தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை என்று காணாமல் போனவரின் மனைவி காவற்துறையில் முறையிட்டுள்ளார் .இதுதொடர்பாக விசாரணைகளை ஆரம்பிகப்படிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்