Sat. Sep 7th, 2024

தாமரை கோபுரம் அமைப்பதில் 200 கோடியை ஏப்பம் விட்ட மஹிந்த ராஜபக்ச அரசாங்கம்- போட்டுடைத்த மைத்திரி

தாமரை கோபுரத்தை திறந்து வைத்து பேசிய ஜனாதிபதி மைத்திரிபால, இந்த கோபுரம் அமைப்பதற்கு 1900 கோடி ரூபா செலவானதாகவும் , இதில் 1600 கோடியை சீனாவின் EXIM வங்கி கடனாக வழங்குவதற்கு முன்வந்திருந்தது. இவர்களுடன் ஏற்படுத்தி கொள்ளப்பட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இதனை நிறுவும் பணியை சீனாவின் CEIEC மற்றும் ALIT நிறுவனகளுக்கு வழங்குவதற்கு இலங்கை சார்பாக இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு இந்த இரு நிறுவனகளுடனும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டது.
இந்த ஒப்பந்தத்தின் பிரகாரம் 200 கோடி ரூபாவை ALIT நிறுவனத்துக்கு முற்பணமாக இலங்கை அரசாங்கம் வழங்கியது . இதன் பின்னர் அந்த பணத்துக்கு என்ன நடந்தது என்றே தெரியாமல் உள்ளது. விசாரணைகளை முடிவில் அந்த நிறுவனம் போலியானது என்று கண்டுபிடிக்கப்படத்துடன் அவர்கள் வழங்கிய தகவல்கள் பொய்யானவையாக இருந்தன.
இதன் விளைவாக EXIM வங்கி வழங்க ஒப்புக்கொண்ட 1600 கோடி ரூபா 1200 கோடி ரூபாவாக குறைந்தது. இன்று வரை அந்த 200 கோடிக்கு என்னவானது என்று தெரியாமலேயே உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இன்றய திறப்புவிழாவில் மஹிந்த ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொதுஜன பெரமுனவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை அடுத்தவாரம் நடக்கவுள்ள நிலையில் ஜனாதிபதி இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது .

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்