Sun. Sep 8th, 2024

தாமரை கோபுரத்தை திறந்து வைத்தார் மைத்திரிபால சிறிசேன

தெற்காசியாவின் மிகவும் உயர்ந்த கோபுரமான தாமரைக் கோபுரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று திங்கட்கிழமை(16) மாலை 5 மணியளில் திறந்துவைக்கப்படுள்ளது .
356 மீற்றர் உயரமான இந்த தாமரைக் கோபுரம் சுமார் 1800 கோடி இலங்கை ரூபா செலவில் மி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு டி. ஆர். விஜயவர்தன மாவத்தையில் பேர வாவிக்கு மிக அருகாமையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இக்கோபுரத்தின் மூலம் வானொலிகள் மற்றும் தொலைக்காட்சிகளின் ஒலிபரப்பினை எண்மான அடிப்படையில் மேற்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது . இதனிடையே அடித்தளத்தில் தொலைத்தொடர்பு அருங்காட்சியகமும் , மேல்தளங்களில் உணவகங்கள், ஹோட்டல்கள் , 500 மற்றும் 1000 பேர் அமரக்கூடிய மண்டபங்கள் அமையவிருக்கின்றன

 


இந்நிலையில் இந்நிகழ்விற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் சமூகளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தபோதிலும் பெருமளவு பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் , சீன தூதுவர் உட்பட வெளிநாட்டு தூதரக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
சீனாவின் எக்சிம் வங்கிக் கடனின் உதவியுடன் 2012 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவின் முன்னைய ஆட்சி காலத்திலேயே இந்த கோபுரம் அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்