தாமரை கோபுரத்தின் திறப்பு விழாவுடன் நினைவு அஞ்சல் முத்திரையும் வெளியீடு
நாளை மறுதினம் திறந்து வைக்கப்படவுள்ள தெற்காசியாவிலேயே மிகவும் உயர்ந்த கோபுரமான தாமரை கோபுரத்தின் திறப்பு விழாவை முன்னிட்டு நினைவு முத்திரை ஒன்றை வெளியிடுவதற்கு தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. நாளை மறுதினம் 16 ஆம் திகதி தாமரை கோபுர திறப்பு விழாவுடன் குறித்த 45 ரூபாய் பெறுமதியான இந்த முத்திரையும் தபால் உறையம் வெளியிடப்படவுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
356 மீற்றர் உயரமான இந்த கோபுரம் சுமார் 1800 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது- 2012 அம்மா ஆண்டு அரமிக்கப்பட்ட இதன் கட்டட பணிகள் 2019 ஆம் ஆண்டிலேயே பூர்த்தியடைந்ததுள்ளது