தவறுதலாக கிணற்றில் விழுந்த முதியவர் மரணமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் மீசாலை மேற்கு மீசாலையில் 7/1/2020 செவ்வாய்க்கிழமை காலை 7.00 மணிக்கு இடம் பெற்றுள்ளது
மீசாலை மேற்கு மீசாலையைச் சேர்ந்த வேலுப்பிள்ளை சதாசிவம் வயது 85 என்பவரே மரணமடைந்தவராவார்
தண்ணீர் அள்ளும் போது தவறுதலாக கிணற்றில் விழுந்துள்ளார் என உறவினர்கள் தெரிவித்தனர்.
சாவகச்சேரி நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதையடுத்து அறிக்கையைப் பார்வையிட்ட நீதிவான் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி மூலம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிசாருக்கு பணித்தார். திடீர் மரண விசாரணை அதிகாரி சீ.சீ.இளங்கீரன் சடலத்தை பார்வையிட்டு சட்ட வைத்திய அதிகாரி மூலம் உடற்கூற்றுப் பரிசோதனை நடாத்திய பின்னர் சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்குமாறு சாவகச்சேரி பொலிசாருக்கு உத்தரவிட்டார்