தலைவர் கிண்ணம் அரையிறுதி ஆட்டங்கள்
இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் அனுமதியுடன் வலிகாமம் லீக் நடாத்தும் வலிகாமம் உதைபந்தாட்ட லீக்கின் முன்னாள் தலைவர் அமரர் நவரட்ணராஜா ஞாபகார்த்த தலைவர் கிண்ணத்திற்கான உதைபந்தாட்ட போட்டியின் அரையிறுதி ஆட்டங்கள் எதிர்வரும் 20ம் , 21ம் திகதிகளில் யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 20ம் வியாழக்கிழமை பிற்பகல் 3.15 மணிக்கு வலிகாமம் லீக்கிற்கு உட்பட்ட அரையிறுதி ஆட்டத்தில் புத்தூர் கலைமதி அணியை எதிர்த்து தோப்புக்காடு விளையாட்டு கழகமும் பிற்பகல் 4.30 மணிக்கு யாழ் மாவட்டத்திற்கு உட்பட்ட அரையிறுதி ஆட்டத்தில் நாவாந்துறை சென்மேரிஸ் அணியை எதிர்த்து உடுப்பிட்டி நவஜீவன்ஸ் அணியும் மோதவுள்ளன.

எதிர்வரும் 21ம் திகதி வெள்ளிக்கிழமை 3.15 மணிக்கு நடைபெறவுள்ள வலிகாமம் லீக்கிற்கு உட்பட்ட அரையிறுதி ஆட்டத்தில் மூளாய் வளர்மதி அணியை எதிர்த்து மாதகல் ஐக்கிய அணியும், பிற்பகல் 4.30 மணிக்கு யாழ் மாவட்டத்திற்கு உட்பட்ட அரையிறுதி ஆட்டத்தில் கொற்றாவத்தை றேஞ்சஸ் அணியை எதிர்த்து மயிலங்காடு ஞானமுருகன் அணியும் மோதவுள்ளன.