Mon. May 18th, 2026

தலிபான் நடாத்திய தாக்குதலில் ஐவர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் தலிபான்களினால் நடாத்தப்பட தாக்குதலில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன், 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இங்கு பல வருடங்களாக நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.

அப்படியிருந்தும் , இந்த பேச்சுவார்த்தைகளின் போது முடிவுகள் எதுவும் இதுவரையில் எட்டப்படவில்லை.

இதனிடையே, கிரீன் வில்லேஜில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியை இலக்காக கொண்டு வெடிகுண்டு தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. கிரீன் வில்லேஜில் சர்வதேச அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அமைந்துள்ளன.

இதனை தொடர்ந்து அங்கு நடந்த இரண்டாவது வெடிகுண்டு தாக்குதலை அடுத்து துப்பாக்கி சூடும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது எரிபொருள் நிலையம் ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

இந்தநிலையில் குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன், 50 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தலிபான்களுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்க சிறப்பு தூதர் ஜல்மே கலீல்ஜாத் ஆப்கானிஸ்தானிற்கு வருகை தந்துள்ள நிலையில் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed