தற்காலிகமா நாடு கடத்தலில் இருந்து தப்பியுள்ள தமிழ் குடும்பம்

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தல் ஆபத்திற்கு உள்ளாகியிருந்த நடேசலிங்கம் பிரியா குடும்பத்தினர் நாடுகடத்ல் முடிவானது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தொடர்பான வழக்கு விசாரணை மெல்போன் பிராந்திய நீதிமன்றில் இன்று விசாரணைக்கு வந்தபோது , நடேசலிங்கம் பிரியா தம்பதிகளின் இரண்டு வயது இரண்டாவது மகள் தருணிகாவின் விசா விண்ணப்பம் சம்பந்தமாக முழுமையான விசாரணை நடத்தப்படவேண்டும் என நீதிமன்றம் குடிவரவு திணைக்களத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த விசாரணை முவடையும்வரை தருணிகாவை நாடுகடத்துவதற்கும் தடை விதித்துள்ளது,
இதன்மூலம் நடேசலிங்கம் பிரியா குடும்பம் நாடுகடத்தலிலிருந்து தற்காலிகமாக பாதுகாக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் மீண்டும் கிறிஸ்மஸ் தீவில் தங்கவைக்கப்பட உள்ளதாக அசெய்திகள் வருகின்றன