Fri. Jan 17th, 2025

தம்புல்லை -ஹபரனை பகுதி விபத்தில் 25 பயணிகள் காயம்

தம்புல்லை -ஹபரனை பகுதியில் இன்று காலை வான் மற்றும் பஸ் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் 25 பயணிகள் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் தம்புல்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 5 பேர் பலத்த காயமடைந்துள்ளனர்

கொழும்பிலிருந்து திருகோணமலைக்குச் சென்ற பேருந்தும் மகரகமவை நோக்கி சென்ற வானுமே சம்பவத்தில் விபத்துக்கு உள்ளாகின

அப்பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக வேகத்தை கட்டுப்படுத்த முடியாததாலேயே இந்த விபத்து சம்பவித்ததாக நம்பப்படுகிறது.

பேருந்து அந்த வீதியில் கவிழ்ந்து போயுள்ளதால் அந்த வீதிவழியாக வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் அறியவருகின்றது. சிகிரியா

பொலிஸார் விபத்து தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் வாகன ஓட்டிகளை மெதுவாக ஓடுமாறு அறிவுறுத்துகிறார்கள்

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்