தமிழ் மக்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும்-நவீன் திஸாநாயக்க

தமிழ் மக்களுக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் 13 ஆம் திருத்த சட்டத்துக்கு அமைய வழங்கப்படவேண்டும் என்று பெருந்தோட்ட தொழில் துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இது தன்னுடைய தனிப்பட்ட கருது என்று அவர் கூறினார்.
முல்லைதீவில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், தமிழர்களுடைய கோரிக்கைகளை சிங்கள தலைவர்கள் செவிமடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். அவர்களுடைய கோரிக்கைகளை செவிமடுக்காமல் போனால், எதிர்காலத்தில் பாரிய பிரச்சினைகள் ஏற்படும் என்றும் எச்சரித்தார். தமிழ் அரசியல் தலைவர்களுடன் பேசி, சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் சர்வசன வாக்கெடுப்பு நடத்துவதன் மூலம், இந்த பிரச்சனைக்கு ஒரு சரியான தீர்வை காணமுடியும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.