Thu. May 21st, 2026

தமிழ் பெண்ணை தாக்கிய முஸ்லீம் அதிகாரி ஜனவரி 14 வரை விளக்கமறியலில்

தமிழ் பெண் அரச ஊழியரை தாக்கிய குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்ட தலைமை அதிகாரியை எதிர்வரும் ஜனவரி மாதம் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் உத்தரவிட்டுள்ளார். இன்று அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த அதிகாரியை சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் எம்.ஐ.எம்.றிஸ்வி முன்னிலையில் முன்னிலைப்படுத்தியபோதே இந்த உத்தரவை நீதிபதி பிறப்பித்தார் . சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் தமது தரப்பு வாதங்களை முன்வைத்து பிணை கோரிக்கையை முன்வைத்திருந்தனர். எனினும் பிணைகோரிக்கை நீதிவானினால் நிராகரிக்கப்பட்டு எதிர்வரும் ஜனவரி மாதம் 14ஆம் திகதி வரை சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். இதன் பொழுது அரசியல் வாதிகள் பொதுமக்களென ஏராளமானோர் நீதிமன்றில் கூடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே இந்த தாக்குதலை கண்டித்து பெண்கள் அமைப்புகள் மட்டக்களப்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்த நிலையிலேயே இந்த தீர்ப்பை நீதிபதி வழங்கியுள்ளார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed