தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்கள்

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. இரன்டு காலை 11 மணியளவில் இந்த சந்திப்பு ஜனாதிபதியின் செயலகத்தில் இடம்பெறவுள்ளது.
இந்த சந்திப்பின்போது தமிழ் மக்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளான மீள்குடியேற்றம், காணி அபகரிப்பு , நிலங்கள் விடுவிப்பு, பலவந்தமாக பௌத்தவிகாரைகளை அமைப்பது போன்ற பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடப்பட இருக்கின்றன.
இன்றய சந்திப்பில் ஜனாதிபதி செயலக அதிகாரிகள், தொல்பொருள் திணைக்களம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளும் உடனிருப்பர் என்று தகவல்கள் வருகின்றன. கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றசந்திப்பின் பொழுதே இந்த சந்திப்பு ஒழுங்கு செய்யப்பட்டதாகவும் தெரியவருகிறது