Sat. Apr 11th, 2026

தமிழ் , தெலுங்கு தயாரிப்பாளர்களை கடுப்பேற்றிய காஜல் அகர்வால்

காஜல் அகர்வால் இந்தியில் மும்பை சாகா திரைப்படத்தில் நடித்துவருகிறார் .
இந்த படத்தில் நடிகர் ஜான் ஆபிரகாமுடன் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிப்பதற்கு காஜல் அகர்வாலுக்கு வெறும் ரூ.30 லட்சம் மட்டுமே சம்பளமாக கொடுத்ததாக தகவல்கள் வெளிவருகின்றன. தமிழ், மற்றும் தெலுங்கு படங்களில் நல்ல சம்பளம் வாங்கும் காஜல் இந்தி படம் என்பதால் தனது சம்பளத்தை கணிசமாக குறைத்துள்ளது பெரிய ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.

காஜல் அகர்வாலுக்கு கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் நல்ல மார்க்கெட் இருக்கிறது. கவர்ச்சியான வேடங்கள் மட்டுமில்லாமல் ஹீரோயினுக்கு நல்ல ரோல் உள்ள கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். அவர் சமீபத்தில் ஜெயம் ரவியுடன் நடித்த கோமாளி திரைப்படம் நல்ல வெற்றிப்படமாக இன்னமும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அடுத்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படமான பாரிஸ் பாரிஸ் படமும் ரிலீசாக இருக்கிறது.
தெலுங்கு படவுலகில் அனைத்து சலுகைகளுக்கு பிறகு காஜல் அகர்வால் ரூ.1.75 கோடி வரை சம்பளமாக வாங்குகிறார் என்று சொல்லப்படுகிறது. அவருடைய மொத்த ஊதியம் சுமாராக 2 கோடியை வரை இருக்கும்.இந்த நிலையில் 30 லடசத்துடன் இந்தி படத்தில் நடிப்பது தமிழ் மற்றும் தெலுங்கு தயாரிப்பாளர்களை கடுப்பேற்றிவிடுள்ளது

About The Author

Share This:

Leave a Reply

You may have missed