தமிழ் சிறார்களின் உளவியலுடன் விளையாடும் ஐரோப்பாவில் உள்ள அனைத்துலக அறிவாடல் குழு
ஊரில் தேர்தல் காலங்களில் தமிழ் தேசியம் பேசுகிற காளான்கள் முளைப்பது போல புலம் பெயர் தேசங்களில் தமிழை வளர்கிறோம் , வரலாற்றை எங்கள் அடுத்த சந்ததிக்கு கடத்துகிறோம் என்று இடைகிடை காளான்கள் முளைக்க தொடங்கிவிட்டது. இதனால் பாதிக்கப்படுவது புலம் பெயர் தேசத்து சிறார்கள் என்பது தான் மிகுந்த கவலைக்குரிய விடயம்.
இப்படி மூன்று வருடத்துக்கு முன்னர் முளைத்தது தான் “அனைத்துலக அறிவடால் ஒருங்கிணைப்பு குழு ”. இது இணைய வழிமூலம் குறிப்பாக ஐரோப்பாவில் உள்ள தமிழ் சிறார்கள் இடத்தில் தமிழ் ஈழத்தின் போராட்ட வரலாறு தமிழ் மற்றும் பொது அறிவு சம்பந்தமான வினா விடை கொத்துக்களை வழங்கி அவர்களிடத்தில் போட்டியை நடத்தி பரிசில்களை வழங்கி வருகின்றது. இந்த குழுவில் யார் இருக்கிறார்கள் இவர்களுக்கு என்ன தகுதிகள் இருக்கிறது என்பது ஒரு மூடு மந்திராமகவே பெற்றோர்களுக்கு உண்டு. இந்த குழுவுக்கு அனைத்துலக கல்வி மேம்பாட்டு பேரவை அனுசரணை வளங்குவதாக சொல்லப்படுகிறது. இவர்களின் நினைப்பு ஐரோப்பாவில் உள்ள தமிழ் பெற்றோர்கள் படிப்பறிவு குறைந்தவர்கள் அவர்களுக்கு ஒன்றும் விளங்காது என்பது.
இப்போது விடயத்துக்கு வருவோம்.
இவர்கள் இணைய வழிமூலம் நடத்தும் இந்த பரிட்சையில் 25 முதல் 35 கேள்விகள் கேட்கப்பட்டு, அதற்கு சிறுவர்கள் கூகிள் படிவம் (Google form ) மூலம் பதில் வழங்கவேண்டும்.
இதில் என்ன கொடுமை என்றால் அநேகமான சிறுவர்கள் எல்லா கேள்விகளுக்கும் சரியான விடைகளை அளிப்பதால், அதில் முன்னுக்கு விடை அளிக்கும் மூன்று சிறுவர்களுக்கு மட்டும் தங்கம் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்கள் வழங்கபடுகின்றன.
குழந்தைகளுக்கு எமது ஈழ வரலாற்றை கடத்துகிறோம் எண்டு வெளிகிட்டு கடைசியில் எமது சிறுவர்களை சொல்லொணா அழுத்தத்துக்கு உள்ளாக்கிறார்கள். ஐரோபோவின் கல்வி முறையில் சிறு குழந்தைகளை அழுத்தத்துக்கு உள்ளாக்காமல் கல்வி முறைகள் அமைக்க பட்டுள்ளதுடன் இப்படியான போட்டி பரிட்சைகள் நடத்தபடுவது இல்லை. இதற்கு எதிராக இந்த பரிட்சை நடத்துவதுடன் குறைந்த நேரத்தில் செய்பவர்களுக்கே பதக்கம் என்று குழந்தைகளை அழுத்ததுக்கு உட்படுத்துவதுடன் அவர்களின் பெற்றோர்களும் அழுத்தத்துக்கு உள்ளகிறார்கள்.
விடையளிக்கும் நேரம் கணக்கில் எடுக்க படுவதால், குழந்தைகளின் திறமையை விட பெற்றோர்களின் திறமையே இந்த போட்டியில் குழந்தையின் பெறுபேற்றை தீர்மானிக்கிறது என்பது மிகவும் கசப்பான உண்மை என்பது இந்த அறிவாடல் குழுவுக்கு இன்னமும் விளங்க வில்லை என்பது மிகவும் வருத்தமாக உள்ளது.
கணணியில் திறமை உள்ள பெற்றோர்கள் தங்களின் பிள்ளைகளுக்கு கூகிள் படிவம் மூலம் மாதிரி பரிட்சைகளை செய்து நிறைய பயிற்சிகள் வழங்குவதால் அவர்களால் மிகவும் வேகமாக இதனை செய்து முடிக்க முடியும் என்பதுடன் 30 கேள்விகளை 90 வினாடிகளுக்குள் செய்து முடித்து விடுவார்கள். ஆனால் மிகவும் திறமையாக வினா விடைகளை மனப்பாடம் செய்த சிறுவர்களால் இப்படியான கூகுள் படிவத்தில் பயிற்சி செய்திருக்காதவிடத்து, அதனை முதல் தரம் செய்யும் பொழுது, அவர்களினால் மற்றய குழந்தைகள் போல் வேகமாக விடையளிக்க முடியாது. இதனால் இங்கு குழந்தையின் திறமையை விட பெற்றோர்களின் கணினி திறமையே உண்மையில் மதிப்பிட படுகின்றது. மேலும் வீடுகளில் கணினிகள் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதுடன் அதற்கான பயிற்சியும் அவசியம்.
இதனால் துரதிஷ்டவசமாக இந்த வசதிகள் மற்றும் பயிற்சிகள் செய்யும் குழந்தைகளே இந்த போட்டி பரிட்சையில் முன்னணி வகிக்கிறார்கள்.
மேலும் வழமையான எழுத்து பரிட்சைக்கு இப்படியான நேர சிக்கல்கள் இல்லை. இதனால் வழமையான கட்டமைப்பு போதுமானது. ஆனால் இந்த இணையவழி மூலமான பரிட்சைக்கு இணையக்கட்டமைப்பு மிகவும் முக்கியம். ஆனால் இந்த கட்டமைப்பு மற்றும் கணினிகள் என்பன அறிவாடல் எற்பாட்டு குழுவால் பரிட்சை நிலையங்களில் ஒழுங்கு செய்யப்படுவதில்லை. இதனை பரிட்சையில் தோற்றும் சிறுவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களே ஒழுங்கு செய்யவேண்டும். அநேகமான இடங்களில் பெற்றோர் தங்களின் கைதொலை பேசியில் உள்ள இணையத்தை கணனிக்கு பங்கிடுவதன் (hotspot ) மூலம் இணையவழி ஏற்படுத்த படுகின்றது. இதன் மூலம் அவர்களின் கணினியின் செய்யற்பாட்டு திறன் மற்றும் இணையவழி வேகம் என்பனவும் சிறுவர்களின் பரிட்சையின் வேகத்தை தீர்மானிக்கிறது. மேலும் இதனை மடி கணினி அல்லது tablet கணினிகள் என்று சொல்லப்படுகிற ipad இலும் செய்யமுடியும். Ipad இல் மிகவும் வேகமாக அழுத்தி செய்யகூடியதாக இருக்கும். மேலும் இந்த பரிட்சை இடம்பெறும் நேரம் பெற்றோர்கள் மண்டபத்துக்குள் அனுமதிக்க படுவதில்லை என்பதால், தனது கைத்தொலைபேசி மூலம் (hotspot ) இணையவழி தொடர்பு ஏற்படுத்திய பெற்றோர் மண்டபத்தை விட்டு குறிப்பிட்ட தூரம் சென்றால், இணையவழி தூண்டிக்கப்படுவத்துடன் இதன் மூலம் விடையளித்தவுடன் குழந்தைகளால் கூகிள் படிவத்தை அனுப்ப முடியாது இருப்பதுடன், அந்த அளிக்க பட்ட விடைகளும் காணாமல் போய்விடும். இது இணைய வழியில் ஏற்படும் சிறு தடங்கலினாலும் ஏற்படும். இப்படியான நிகழ்வுகள் பல கடந்தகாலங்களில் நிகழ்ந்ததுடன் இதனால் பாதிக்கபட்ட மாணவர்கள் உள்ளார்கள் என்பது இந்த “அறிவாடல் குழுவுக்கு ” தெரியுமா என்பது கேள்விக்குறி.
இப்படியான பல குறைபாடுகள் உள்ளஇந்த போட்டி பரிட்சை நடத்தி ஒழுங்காக பிள்ளைகளின் உண்மையான திறமையை மதிப்பீடு செய்யாமல் மூன்று குழந்தைகளை தேர்வு செய்து பரிசில்களை வழங்குவது இதில் பங்கேற்கும் பல நூறு சிறுவர்களின் மனங்களை பாதிக்கும் என்பது இதனைநடத்தும் அறிவாடல் குழு, உண்மையில் ஒரு அறிவுள்ள குழுவா என்று எண்ண தோன்றுகின்றது. இந்த முறை வினா தெரிவில் குழறு படி இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
இதே நேரம் இந்த
முறை ஒரு இடத்துக்கு இரண்டு சிறுவர்கள் தெரிவு செய்யப்படுள்ளது ஆச்சரியமாகவுள்ளது. கூகிள் படிவம் மூலம் மிக தெளிவாக முதல் மூன்று இடங்களும் தெரிவு செய்யப்படக்கூடிய நிலையில் இவ்வாறான தெரிவு தங்களுக்கு நெருக்கமானவர்களை உள்ளவாங்குவதற்காகவா என்று கேள்வி ஏழாமல் இல்லை. பாதிக்கப்பட்ட ஒரு ஆண்டுக்கு மட்டும் அதிகமானோர் தேர்வு செய்வதாக கூறியவர்கள் இன்னுமொரு ஆண்டிலும் அதிகமானோரை தேர்வு செய்திருப்பது சந்தேகமாகவே உள்ளது.
இப்படி சிறுவர்களின் மனநிலையில் விளையாடும் பொறுப்பற்ற இந்த குழுவை என்ன என்று சொல்வது.
இப்படி தமிழ் வளர்கிறோம் வரலாறு கடத்துகிறோம் என்று குழந்தைகளை தேவையில்லாமல் அழுத்தத்திற்கு உட்படுத்தி தாங்கள் ஏதோ சமூகத்தில் சேவை செய்கிறோம் என்று படங்காட்டி திரியாமல் மிகவும் பொறுப்புடன் வரலாற்றை கடத்துவதற்கு சரியான பொறிமுறையை ஒரு உண்மையான அறிவுள்ள குழு ஒன்றை உருவாக்கி செயல் படுத்தினால் மிகவும் நன்றாக இருக்கும். இந்த முயற்சி ஒரு காலத்தின் தேவை. ஆனால் அதனை ஒரு சிறந்த பொறிமுறையை ஏற்படுத்தி செயல்படுத்தினால் நன்றாக இருக்கும்.