தமிழ்மொழித் தின தேசிய மட்ட போட்டிக்கு திருக்குடும்ப கன்னியர் மடம் மாணவிகள் தெரிவு
அகில இலங்கை கர்நாடக சங்கீத மாகாண மட்ட தமிழ்மொழித் தின போட்டியில் யா/யா/திருக்குடும்ப கன்னியர் மடம் தேசிய பாடசாலையைச் சேர்ந்த மாணவிகள் இரு முதலிடங்களைப் பெற்று தேசிய மட்ட போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.
கிளிநொச்சி பூநகரி மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற அகில இலங்கை கர்நாடக சங்கீத மாகாண மட்ட போட்டியில் புல்லாங்குழல் தனி மற்றும் பல்லிய இசையில் முதலிடங்களைப் பெற்று தேசிய மட்ட போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர்.