தமிழீழ விடுதலை புலிகள் தொடா்பாக நான் ஒன்றும் சொல்லவில்லை. பதறும் முரளி.

தமிழீழ விடுதலை புலிகள் குறித்தும், விடுதலை புலிகள் அழிக்கப்பட்டது குறித்தும் நான் பேசவேயில்லை. இந்த நாட்டில் சில அரசியல்வாதிகளும், ஊடகங்களுமே பிரச்சினைகளுக்கு காரணம்.
மேற்கண்டவாறு முத்தையா முரளிதரன் கூறியுள்ளாா். ஜனாதிபதி வேட்பாளா் கோட்டாபாயவுக்கு ஆதரவாக நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தமிழீழ விடுதலை புலிகள் அழிக்கப்பட்ட நாள்
தனக்கு மகிழ்ச்சியான நாள் எனவும், புலிகள் மக்களை கொன் றாா்கள் எனவும் முரளிதரன் கூறியதாக செய்திகள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் குறித்த விடயம் பெரும் சா்ச்சைகளை உண்டாக்கியிருக்கும் நிலையில் கொழும் பை தளமாக கொண்டு இயங்கும் தொலைக்காட்சி ஊடகம் ஒன்றுக்கு
வழங்கியுள்ள விளக்கத்தி லேயே முரளிதரன் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். அதில் மேலும் அவா் கூறியுள்ளதாவது,
என்னுடைய கருத்து திாிவுபடுத்தப்பட்டுள்ளது. இலங்கையில் முரண்பாடுகள் நீடிப்பதற்கு சில அரசியல்வாதிகளினதும், ஊடகங்களினதும் செயற்பாடுகளே காரணமாக அமைகின்றது.
2009 – 2019 இற்கு இடைப்பட்ட யுத்தம் அற்ற சூழல் எனக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் 2019 இல் மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றுள்ளது.
எனவே என்னுடைய வாக்கு நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கூடிய ஒருவருக்கே வழங்கப்படும் என்பதையே தெரிவித்திருந்தேன். யுத்தம் மகிழ்ச்சியான விடயம் அல்ல
என்பதைதான் தெரிவித்திருந்தேன். ஆனால், விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டமை தொடர்பான எந்த வார்த்தையையும் பிரயோகிக்கவில்லை.
இன்னொரு விடயத்தையும் குறிப்பிட்டிருந்தேன். சிறுபான்மை கட்சிகள் தொடர்பான கேள்விக்கு, கட்சி ரீதியான – மத ரீதியான அரசியல் கட்சிகளின் செய்ற்பாடுகள்
நாட்டில் பிரிவினைகளை ஏற்படுத்துகின்றது என்ற வகையில் அவை அகற்றப்பட வேண்டும் என்ற விடயத்தையும் கூறியிருக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் வெளிப்படையாக யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை என்று முரளிதரன் தெரிவிக்கின்றபோதிலும் கோட்டபாய ராஜபக்ஷ
ஆதரவு கலந்துரையாடல் ஒன்றில் பங்குபற்றி, யுத்ததை முடிவுக்கு கொண்டு வரப்பபட்டமை தொடர்பில் கருத்து தெரிவித்திருப்பதன் மூலம் முரளிதரனின் எதிர்பார்ப்பு
வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.