Fri. Apr 19th, 2024

தமிழில் 100% பெற்றாலே வடமாகாணம் முன்னேறும் – ப.தர்மகுமாரன் எடுத்துரைப்பு

வடக்கு மாகாணம் தாய்மொழி தமிழில் நூறுவீத சித்தியை எட்டினால் மட்டுமே ஏனைய பாடங்களில் சித்திவீதத்தினை அதிகரிக்கமுடியும் என உடற்கல்வி டிப்ளோமா ஆசிரிய சங்கத்தின் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணம் தொடர்ந்து க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் ஒன்பதாவது இடத்தில இருப்பது சிறப்பானது அல்ல. அதற்காக இதனை கல்வித்திணைகளத்தின் மீது வசைபாடிவிட்டு ஒதுங்குகின்ற விடயம் அல்ல. இதனை கல்விப்புலம் சார்ந்த அனைவரும் ஒருதிசையில் நோக்க வேண்டும். தனிப்பட்டவர்கள் மீது சேறு பூசுகின்ற விடயத்தை  விட்டு ஆக்கபூர்வமான செயல்பாட்டை முன்னெடுக்க வேண்டும். ஏனெனில் தாய்மொழி தமிழில் வீழ்ச்சியடைவதற்கான காரணம், ஒன்று ஆரம்பபிரிவில் தவறு ஏற்பட்டிருக்கலாம் அல்லது இடைநிலை பிரிவில் அதனையும் தாண்டி ஆரம்ப பிரிவில் சர்வதேச மொழியை மாணவர்களுக்கு புகுத்துகின்றமை பன்னாட்டு சர்வதேச பாடசாலையில் பயின்று விட்டு இடையில் அரச பாடசாலைக்கு பரீட்சைக்கு தோற்றுதல் போன்ற காரணங்களுடன் தமிழ் பண்டிதர்களை நீண்டகாலம் உருவாக்காமை, தமிழின் வீழ்ச்சிக்கு வித்திடுகின்றது. இதனால் ஏனைய பாடங்கலளும் வீழ்ச்சிக்கு உள்ளாகின்றது. அது மட்டுமன்றி தாய்மொழியில் சாதாரண சித்தியை பெறுவதனால் எந்த நன்மையும் கிடைக்க போவதில்லை எனவே தமிழ் பாடத்தில் கூடிய கவனம் எடுத்து மாணவர்களை வழிப்படுத்த வேண்டும். இல்லையேல் வடமாகாணம் கல்வியில் வாடியே கிடக்கும். பருவ மழைபோல இந்த வீழ்ச்சியை பேசிவிட்டு போகாது நீண்ட திட்டம் ஒன்றை அமுல்படுத்தி  பெறுபேற்று வீத அதிகரிப்புக்கு முனைய வேண்டும். யார்
சொல்லுகின்றார்கள் என்று பார்க்காது சொல்லுகின்ற விடயம் வட மாகாண கல்வி வளர்ச்சிக்கு வித்திடுமா எனப்பார்க்கவும் என்று சங்கத் தலைவர் ப.தர்மகுமாரன் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்