தமிழிசை சவுந்தரராஜன் தெலுங்கானா ஆளுநராக நியமனம்
தெலுங்கானா, கேரளா மற்றும் மஹாராஷ்ட்ரா உள்பட 5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு
இன்று நியமனம் செய்துள்ளது. மத்திய அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இதை வெளியிட்டுள்ளது.
இந்த செய்திக்குறிப்பின் படி தமிழகதில் பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
கேரளா மாநிலதின் ஆளுநராக இருந்த சதாசிவத்தின் இடத்துக்கு, ஆரிப் முகமது கான் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மகாராஷ்டிர ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவோ மாற்றப்பட்டு அவரின் இடத்துக்கு பகத் சிங் கோஷ்பார் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இதேபோல், ராஜஸ்தான் மாநில ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா மற்றும் இமாசலப்பிரதேச மாநில ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பாஜக தலைவராக வேறு ஒருவர் நியமிக்கப்பட இருப்பதாக வெளிவந்த வதந்திகளுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழிசையை மாற்றியுள்ளதன் மூலம் பாஜக தமிழகத்தில் புதிய அரசியல் வியூகம் அமைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது