தபால் சேவை தடையின்றி இயங்குகிறது
யாழ்ப்பாணம் மற்றும் ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான சேவைகள் தொடர்ந்தும் தடையின்றி இயங்கும் என யாழ்ப்பாண பிரதான தபாலகம் அறிவித்துள்ளது. தபால் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டாலும் வட, தென்பகுதிக்கான தபால் சேவை வாகனத்தின் மூலம் இடம்பெற்று வருகிறன்றது. தென் பகுதியில் இருந்து அநுராதபுரத்திற்கு எடுத்து வரும் தபால் பொதிகள் விசேட வாகனம் மூலம் தபால் அலுவலகத்திற்கு எடுத்து வரப்பட்டு கிளை அலுவலகங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகின்றது. எனவே எமது சேவையில் எந்தவித தடங்கலின்றி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.