தனிமையில் வாழ்ந்த பெண்ணுக்கு நடந்த பயங்கரம். இச்சைக்கு இணங்காததால் காதை அறுத்த கொரூரம்.
குருணாகல்- கல்கமுவ கிராமத்தில் தனிமையில் வாழ்ந்த பெண்ணின் வீட்டுக்குள் புகுந்த நபா் ஒருவா் பாலியல் பலாத்காரத்துக்கு முயன்று தோற்றதால் பெண்ணின் காதை அறுத்துள்ளாா்.
அத்துடன் குறித்த பெண்ணின் உடலில் பல இடங்களில் கத்தியால் வெட்டியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு பிள்ளைகளின் தந்தை
கைது செய்யப்பட்டு விளக்கறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபர் கல்கமுவ, பேரபெதியா பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், நாட்டில் பதிவு செய்யப்பட்ட குற்றவாளிகளின் பெயர் பட்டியலில்
அவரது பெயரும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முகத்தை மூடி வந்த சந்தேக நபர் பெண்ணுடன் மல்லுக்கட்டியுள்ளார். பின்னர் அவரால் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த போது
முடியாமல் போனமையினால் கோபத்தில் கத்தியால் வெட்டியுள்ளார். உயிரை காப்பற்றிக் கொண்ட பெண் அருகில் உள்ள வீடு ஒன்று சென்றுள்ளார்.
அந்த வீட்டில் இருந்தவர்கள் அவரை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.