Mon. Feb 10th, 2025

தனது பணிகளில் தடங்கல் ஏற்படுத்தியவர்கள் குறித்து டில்ருக்சி வெளிப்படுத்த வேண்டும்-ஜனாதிபதி வேண்டுகோள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கு தடையேற்படுத்திய அமைச்சர்கள் யார் என்று ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் டில்ருக்சி விக்கிரமசிங்க பகிரங்கப்படுத்தவேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவருக்கும் அவன்ட் கார்ட் தலைவர் சேனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் பதிவுகள் இலங்கை அரசியலில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஜனாதிபதி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

குறிப்பிட்ட தொலைபேசி உரையாடல் பதிவு பல கேள்விகளை எழுப்பியுள்ளதாக தெரிவித்த அவர் , டில்ருக்சி விக்கிரமசிங்கவின் காலத்தில் இடம்பெற்ற விசாரணைகளில் பல அரசியல்மயப்படுத்தப்பட்டன என்பதே தனது கரிசனை எனவும் சிறிசேன தெரிவித்துள்ளார். இதனால் தனது பணிகளில் தடங்கல் ஏற்படுத்தியவர்கள் குறித்து வெளிப்படுத்த வேண்டும் என்று ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்