Fri. Mar 21st, 2025

தந்தை பணம் கொடுக்காததால் விபரீத முடிவெடுத்த மகன்!

யாழ் – அச்சுவேலி பகுதியில் 20 வயதுடைய இளைஞர் தந்தை பணம் கொடுக்காததால் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (29.12.2023) பதிவாகியுள்ளது.

இராதாகிருஷ்ணன் சுதாந்தன் என்ற இளைஞனின் தந்தை அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் நிலையில் குறித்த இளைஞன், தொழில்நுட்ப கல்லூரியில் கல்வி பயில்வதற்காக தந்தையிடம் பணம் கேட்டுள்ளார்.

தந்தை காசு கொடுக்க மறுத்த காரணத்தால் நேற்று முன்தினம் (29.12.2023) குறித்த இளைஞன் வீட்டில் தூக்கிட்டு உயிர்மாய்த்துக் கொண்டுள்ளார்.

குறித்த இளைஞனின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் அவரது சடலம் நேற்றைய தினம் (30.12.2023) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்