Sun. Apr 12th, 2026

தணி ஞாபகார்த்த கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டமும் பரிசளிப்பு விழாவும்

வடமராட்சி கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான 16 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான அமரர் தணிகைவேள் ஞாபகார்த்த கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட தொடரின் இறுதியாட்டமும் பரிசளிப்பு விழாவும் நாளை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நெல்லியடி மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

சுற்றுப் போட்டிக் குழுத் தலைவர் க.கனகராஜா தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் க. சத்தியபாலன், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் இ.இராஜசீலன், கெளரவ விருந்தினர்களாக யா/நெல்லியடி மத்திய கல்லூரியின் ஓய்வு நிலை அதிபர் கலாநிதி.செ.சேதுராஜா, பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் ஓய்வு நிலை அதிபர் த.கலைச்செல்வன், நெல்லியடி மத்திய கல்லூரியின் ஓய்வு நிலை அதிபர் க.கிருஸ்ணகுமார், உடுத்துறை மகா வித்தியாலயத்தின் அதிபர் ந.தேவராஜா, வடமராட்சி கல்வி வலய ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் செ.செல்வக்குமரன் ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர்.
குறித்த போட்டியின் இறுதியாட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி அணியை எதிர்த்து கொற்றாவத்தை அமெரிக்கன் மிஷன் பாடசாலை அணியும், மூன்றாம் இடத்திற்கான போட்டியில் ஹாட்லிக் கல்லூரி அணியை எதிர்த்து உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி அணியும் மோதவுள்ளன.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed