Wed. Mar 11th, 2026

தணிகைவேள் ஞாபகார்த்த கிண்ணத்திற்கான சுற்றுப் போட்டி நெல்லியடி மத்திய கல்லூரி மற்றும் கொற்றாவத்தை அமெரிக்கன் மிஷன் பாடசாலை அணிகள் இறுதியாட்டத்திற்குத் தகுதி

தணிகைவேள் ஞாபகார்த்த கிண்ணத்திற்கான கால்பந்தாட்ட போட்டியில் கொற்றாவத்தை அமெரிக்கன் மிஷன் பாடசாலை மற்றும் நெல்லியடி மத்திய கல்லூரி அணிகள் இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர்.

வடமராட்சி கல்வி வலயத்திற்கு உட்பட்ட 16 வயதுப் பிரிவினருக்கான அரையிறுதி ஆட்டங்கள் இன்று வெள்ளிக்கிழமை பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி அணியை எதிர்த்து கொற்றாவத்தை அமெரிக்கன் மிஷன் பாடசாலை அணி மோதியது. ஆட்ட நேர முடிவில் இரு அணிகளும் 2:2 என்ற கோல் கணக்கில் சமநிலை வகித்தனர். இதனால் சமநிலை தவிர்ப்பு உதை மூலம் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்பட்டது. இதில் கொற்றாவத்தை அமெரிக்கன் மிஷன் பாடசாலை அணி 3:2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

அடுத்து நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் நெல்லியடி மத்திய கல்லூரி அணியை எதிர்த்து உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி அணி மோதியது. இதில் ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய நெல்லியடி மத்திய கல்லூரி அணி 4:0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதியாட்டத்திற்கு தகுதி பெற்றுள்ளனர்.

குறித்த நிகழ்வில் வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளர் கனகசபை சத்தியபாலன் விருந்தினராக கலந்து சிறப்பித்தார்.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed