தட்டெறிதலில் மீ்ண்டும் சாதனையை வடமராட்சி பாடசாலைகள் சாதனை

பாடசாலைகளுக்கிடையிலான தடகளத் தொடரில் ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் வடமராட்சி கல்வி வலய பாடசாலைகள் மீண்டும் பதக்கங்களை வழித்துத் துடைத்து சாதனையைப் பதிவு செய்தன
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான ஆண்கள் பெண்களுக்கான தடகளத் தொடர் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.
இதில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 20 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு போடுதல் போட்டியில் பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.மிதுன்ராஜ் 43.88 மீற்ரர் தூரம் எறிந்து தங்கப் பதக்கத்தையும்,
தும்பளை சிவப்பிரகாச மகா வித்தியாலயத்தைப் பிரதிநிதித்துவம் செய்த எம்.குமணன் 31.71 மீற்ரர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தையும்,
கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த யு.அபியான 30.37 மீற்றர் தூரம் எறிந்து வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினர்