Wed. Jul 16th, 2025

தட்டெறிதலில் பருத்தித்துறை பிரதேச செயலக வீரர்கள் சாதனை முறியடிப்பு

யாழ் மாவட்ட செயலகத்திற்கு உட்பட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான மாவட்ட மட்ட தட்டெறிதல் போட்டியில் பருத்தித்துறை பிரதேச செயலகத்தை பிரதிநிதித்துவம் செய்த இரு வீரர்கள் முன்னைய சாதனையை முறியடித்ததோடு பருத்தித்துறை பிரதேச செயலகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த மிதுன்ராஜ் புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளார்.

யாழ் மாவட்ட செயலகத்திற்கு உட்பட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான மாவட்ட மட்ட மெய்வல்லுநர் போட்டிகள் யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் பருத்தித்துறை பிரதேச செயலகத்தை பிரதிநிதித்துவம் செய்த மிதுன்ராஜ் 46.46 மீற்றர் தூரம் எறிந்து 2025ம் ஆண்டுக்கான புதிய சாதனையை பதிவு செய்ததோடு தங்கப் பதக்கத்தையும், பருத்தித்துறை பிரதேச செயலகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த எஸ்.பிரகாஷ்ராஜ் 45.92 மீற்றர் தூரம் எறிந்து முன்னைய சாதனையை முறியடித்து வெள்ளிப் பதக்கத்தையும், கரவெட்டி பிரதேச செயலகத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ரி.சந்தோஸ் வெண்கல பதக்கத்தையும் கைப்பற்றினர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்