தடை விதித்த பொலீஸாரையும் தள்ளி மக்கள் போராட்டம்

வடமராட்சி பகுதியில் எழுச்சியுடன் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான ஊர்வலம் அனைத்து தரப்பினராலும் முன்னெடுக்கப்பட்டது.
இன்று பிற்பகல் 5 மணியளவில் நெல்லியடி பகுதிக்கு வருகைதந்த பேரணியின் மோட்டார் சையிக்கிள் குழுவினரை வல்லைப் பகுதியில் வைத்து தடைபோட முற்பட்டனர். இருப்பினும் தடைகள் மீறப்பட்டு போரணி தொடந்தது. அதேபோல மந்திகை தெருமுடி மடத்தடியிலும் பொலீஸார் தடை விதிக்க முற்பட்டனர். ஆனால் பொலீஸாரை தள்ளிக் கொண்டு மக்கள் வெள்ளம் சென்றது. வடமராட்சி பகுதியில் பல்லாயிரக் கணக்கான மக்கள் பங்கேற்பு