தடைதாண்டல் முடிக்காத ஆசிரியர்கள் பதிவுகளை மேற்கொள்ளவும்
ஆசிரியர்களுக்கான வினைத்திறன் தடைதாண்டல் இதவடிவங்களைப் பூர்த்தி செய்யாத ஆசிரியர்கள் உடனடியாக பூர்த்தி செய்வதற்கான பதிவுகளை மேற்கொள்ளுமாறு வடமாகாண கல்வி பணிப்பாளர் தி.ஜோண் குயின்ரஸ் அறிவித்துள்ளார்.
இதுவரை வினைத்திறன் தடைதாண்டல் இதவடிவங்களைப் பூர்த்தி செய்யாத ஆசிரியர்கள் தமது பெயர் விபரங்களை தாங்கள் கடமையாற்றும் பாடசாலை அமையப் பெற்றுள்ள வலயக் கல்வி அலுவலகங்களில் தமது பதிவுகளை செய்யுமாறும் அவர் அறிவித்துள்ளார்.