தங்களின் சம்பளத்துக்காக அடிபடும் MP கள்..
பாராளுமன்றில் நேற்றையதினம் உறுப்பினர்களின் சம்பள பிரச்சினை தொடர்பான வாதம் இடம்பெற்றது. இதன்போது UPFA MP கூறியதாவதது பாராளுமன்றில் இருக்கும் எவரும் மாதத்துக்கு 400,000 ரூபாவை பெறுவதில்லை. அவர்கள் 300,000 ரூபாவை மட்டுமே பெறுகின்றார்கள். அந்த 100,000 ரூபாவுக்கு என்ன நடந்தது என்று தனக்கு உடனடியாக தெரிய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இதன் போது கருத்து தெரிவித்த UNP MP துஷாரா இந்துனில் , பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அடிப்படை சம்பளம் 54,000 ரூபா , இதில் 5,000 ரூபாவை தினமும் எரிபொருளுக்கு செலவிடுவதால்,இந்த சம்பளம் 2 கிழமைக்கே செலவாகிவிடுகின்றது .
இதன் போது கருத்து தெரிவித்த UPFA MP தயாசிறி ஜயசேகர, 200,000 ரூபா மேலதிக படி அமைச்சுக்களை மேற்பார்வையிடும் MP களுக்கு மட்டும் என்றும், ஜனாதிபதியின் கட்சி MP களுக்கு அல்ல என்றும் குறிப்பிடடார். இதன் போது குறுகிடட பாராளுமன்ற அவை தலைவர் லக்ஸ்மன் கிரியெல்ல , இதனை தான் ஜனாதிபதியின் கவனத்துக்கு எடுத்து செல்வதாகவும் குறிப்பிடடார்.