Sat. Dec 7th, 2024

டெல்லி கட்டட விபத்தில் ஒருவர் உயிரிழப்பு: பலர் படுகாயம்

டெல்லி கட்டட விபத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று (திங்கட்கிழமை) இரவு, டெல்லி- சீலாம்பூர் பகுதியில் 4 அடுக்குகளுடன் கட்டப்பட்டு வந்த கட்டடம் திடீரென இடிந்து விழுந்துள்ளது.

இதன்போது சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதில் 22 வயது இளம்பெண் சடலாக கண்டெடுக்கப்பட்டார். இவர் ஹீனா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டடம் கட்டப்பட்டு வந்த நிலையில் உள்ளூர்வாசிகள் சிலர், தரை தளத்தில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி உள்ளனர். இதற்காக பலர் அங்கு கூடியுள்ளனர். இதன்போதே கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததாக அப்பகுதியிலுள்ளோர் தெரிவித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்