டெங்கு பெருகக் கூடிய சூழலினை வைத்திருந்த உரிமையாளர்களுக்கு 66 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளது
பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட பிரிவுகளில் கடந்த வாரம் டெங்கு கட்டுப்பாட்டு களவிஐயம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது நுளம்பு பெருகக்கூடியவாறான சூழலினை வைத்திருந்த 10 ஆதன உரிமையாளர்களிற்கு எதிராக இன்றைய தினம் (2026.03.13) நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகரான ப. தினேஷ் என்பவரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது இன்றையதினமே விசாரணையிற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றஞ்சாட்டப்பட்ட அனைத்து ஆதன உரிமையாளர்களும் குற்றத்தை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் கௌரவ மன்றினால் ஆதன உரிமையாளர்களிற்கு மொத்தமாக 66,000 தண்டப்பணம் அறவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.