டெங்கு பரவும் அபாயம்!! -எச்சரிக்கிறது தடுப்பு பிரிவு-
ஆரம்பித்துள்ள மழையுடனான காலநிலையின் காரணமாக நாட்டில் டெங்கு நோய் அதிகம் பரவும் அபாயம் காணப்படுகின்றது.
குறிப்பாக கொழும்பு, கம்பஹா, காலி, மாத்தறை, இரத்தினபுரி மற்றும் கேகாலை போன்ற மாவட்டங்களில் டெங்கு நோய்க்கான அச்சுறுத்தல் அதிகமாக காணப்படுவதாக தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவு தெவித்துள்ளது.
இதுகுறித்து தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவு அறிக்கையில் குறிப்பிடும்போது,
தமது சுற்றுப்புற சூழலில் நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களை இல்லாதொழிக்க வேண்டும். நுளம்பு கடிப்பதை தவிர்க்க நுளம்பு வலைகளை பயன்படுத்தல். காய்ச்சல் ஏற்பட்டு இரண்டு தினங்களில் அருகில் இருக்கும் வைத்தியரிடமோ அல்லது வைத்தியசாலையிலோ ஆலோசனையை பெறுதல். கடுமையான காய்ச்சலின் போது நிவாரணி மருந்துகளாக (Nளுயுஐனுள),(ளுவநசழனைள) மருந்துகளை பாவித்தல்.
காய்ச்சலின் போது வாந்தி ஏற்படுதல்,தலைச்சுற்றல்,சிறுநீர் அளவு குறைவடைதல், வயிற்று வலி போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் உடனடியாக வைத்திய பரிசோதனையை மேற்கொள்ளவும்.
இவ்வாறான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது டெங்கு நோயில் இருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளலாம் என தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.