டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய சூழலைப் பேணிய ஆதன உரிமையாளர்களில் பருத்தித்துறையில்ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாவும் கரவெட்டியில் 60 ஆயிரம் ரூபா அபராதமும் வழங்கப்பட்டது
பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பருத்தித்துறை நகரசபை, அல்வாய் மற்றும் புலோலி பிரதேசங்களில் கடந்த வாரம் டெங்கு கட்டுப்பாட்டு களவிஐயம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது நுளம்பு பெருகக்கூடியவாறான சூழலினை வைத்திருந்த பருத்தித்துறை நகரசபையின் எல்லைக்குட்பட்ட 10 குடியிருப்பாளர்களிற்கும் அல்வாய் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் 05 குடியிருப்பாளரிற்கும் புலோலி பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவில் 07 குடியிருப்பாளரிற்கும் எதிராக நேற்று வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நகரசபையின் பொதுச்சுகாதார பரிசோதகரான ப. தினேஷ், அல்வாய் மற்றும் புலோலி பொதுச்சுகாதார பரிசோதகர் க.கிருஸ்ணரட்சகன் என்பவர்களால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கானது நேற்றைய தினமே விசாரணையிற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றஞ்சாட்டப்பட்ட அனைத்து ஆதன உரிமையாளர்களும் குற்றத்தை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் ஆதன உரிமையாளர்களிற்கு தலா 5,000 தண்டப்பணம் வீதம் 110,000 தண்டப்பணம் அறவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட கரணவாய் பொதுச்சுகாதார பிரிவிலும் அல்வாய் பொதுச்சுகாதார பரிசோதகர் பிரிவிலும் கடந்த வாரம் டெங்கு கட்டுப்பாட்டு களவிஐயம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது நுளம்பு பெருகக்கூடியவாறான சூழலினை வைத்திருந்த கரணவாய் பிரிவில் 07 ஆதன உரிமையாளர்களிற்கும் அல்வாய் பிரிவில் 05 ஆதன உரிமையாளர்களிற்கும் எதிராக கரணவாய் பொதுச்சுகாதார பரிசோதகரான சு.புவீந்திரனாலும் அல்வாய் பொதுச்சுகாதார பரிசோதகர் இ.ஆதவனாலும் நேற்று வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது . இவ்வழக்கானது நேற்றைய தினமே விசாரணையிற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது குற்றஞ்சாட்டப்பட்ட அனைத்து ஆதன உரிமையாளர்களும் குற்றத்தை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில் தலா 5000 வீதம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தினால் ஆதன உரிமையாளர்களிற்கு மொத்தமாக 60,000 தண்டப்பணம் அறவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது
