Fri. Jan 17th, 2025

டீசலுடன் மண்ணெண்ணெய் கலந்து விற்ற எரிபொருள் நிரப்பு நிலையம்-கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சி கரடிபோக்கு சந்தியில் உள்ள எரிபொருள் விநியோக நிலையம் ஒன்றில் டீசல் உடன் மண்ணெண்ணெய் கலந்து விநியோகிக்கப்படுவதாக குற்றம் சாடப்பட்டுள்ளது. இது தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது. இந்த எரிபொருள் நிலையத்தில் விநியோகிக்கப்படும் டீசலுடன் மண்ணெண்ணெய் கலக்கப்பட்டுள்ளதாக வாகன சாரதி ஒருவரால் இன்று காலை கிளிநொச்சி காவல்துறையில் முறைப்பாடு செய்யப்படுள்ளது .
இந்த முறைப்பாடு தனிப்பட்ட விரோதம் காரணமாக மேற்கொள்ளப்பட்டதா அல்லது உண்மையில் நடந்ததா என்பது விசாரணைகளின் பின் தெரியவரும் என்ற பொழுதிலும், வடபகுதியில் இவ்வாறான முணுமுணுப்புகள் கடந்த காலங்களில் இருந்து வந்த போதிலும் , முறைப்பாடு செய்யும் அளவுக்கு யாரும் சென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதே நேரம் அநேகமான எரிபொருள் நிலையங்களில் 10 ரூபாவுக்கு குறைவான மீதிப்பணம் வழங்க படுவதில்லை என்ற முறைப்பாடும் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்