டயலக் வெற்றி கிண்ண பெண்களுக்கான கரப்பந்தாட்டப் போட்டியில் உரும்பிராய் பைன்கரன் அணி கிண்ணங்களை வழித்துத் துடைத்தனர்.

டயலொக் வெற்றி கிண்ணத்திற்கான யாழ் மாவட்ட அணிகளுக்கு இடையிலான பெண்களிற்கான கரப்பந்தாட்டப் போட்டியில் உரும்பிராய் பைன்கரன் அணி 23 வயதிற்குட்பட்ட மற்றும் திறந்த வயதுப் பிரிவினருக்கான போட்டிகளில் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர்.
இதுதொடர் இன்று ஞாயிற்றுக்கிழமை புத்தூர் கலைமதி மற்றும் வளர்மதி விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்றது.
23 வயதிற்குட்பட்ட பிரிவினருக்கான இறுதியாட்டத்தில் உரும்பிராய் பைன்கரன் அணியை எதிர்த்து காங்கேசன்துறை ஐக்கிய அணி மோதியது. ஆட்டம் ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்திய உரும்பிராய் பைன்கரன் அணி 25:13, 25:13 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றினர்.
திறந்த வயதுப் பிரிவினருக்கான இறுதியாட்டத்திலும் உரும்பிராய் பைன்கரன் அணியை எதிர்த்து காங்கேசன்துறை ஐக்கிய அணி மோதியது.
முதலாவது செற்றில் உரும்பிராய் பைன்கரன் அணி 25:17 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் இரண்டாவது செற்றில் காங்கேசன்துறை ஐக்கிய அணி 25:13 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தனர்.
வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் மூன்றாம் செற்றில் இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக விளையாடினர். இருப்பினும் க
உரும்பிராய் பைன்கரன் அணி 25:22 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றினர்.
