Sat. Dec 7th, 2024

ஜேவிபி கோத்தபாயவின் வெற்றியை உறுதி செய்தது -உதய கம்மன்பில !!

இருபது வருடங்களுக்கு பிறகு ஜேவிபி ஜனாதிபதி வேட்பாளரை நிறுத்துவது ஒரு நல்லவிடயம் . இதன் மூலம் அவர்கள் கோத்தபாய ராஜபக்சவின் வெற்றியை உறுதி செய்திருக்கிறார்கள்.
கடந்த இரண்டு ஜனாதிபதி தேர்தல்களிலும் ஜேவிபி வாக்குகள் பொது வேடபாளர்களுக்கே சென்றது.இதனால் கடந்த முறை பொதி வேட்பாளர் 62 லட்சம் வாக்குகளை மஹிந்தவின் 58 லட்ஷம் வாக்குகளுக்கு எதிராக பெற்றனர். இதில் ஜேவிபி யின் வாக்குகளும் அடங்கும்.

கடந்த உள்ளுராட்சி தேர்தல்களில் பொதுஜன பெரமுன 42% வாக்குகளையும் ஐக்கிய தேசிய கட்சி 29% வாக்குகளையும் ஜேவிபி 6% வாக்குகளையும் பெற்றன.
இந்த ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி யின் வாக்குகள் ஜேவிபி கே செல்வதால் ரஜாபக்சவின் வெற்றியை ஜேவிபி யினர் மிக எளிதாகியுள்ளனர் என்று பொதுஜன பெரமுனவின் கூட்டணி கட்சியின் தலைவர்களில் ஒருவரான உதய கம்மன்பில கூறினார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்