Sat. Jun 14th, 2025

“ஜெயந்தி குயின்ஸ்” கிண்ணம் யாழ் பல்கலைக்கழக அணி வசம்

வடமாகாண கழகங்களுக்கு இடையே நடாத்தப்பட்ட “ஜெயந்தி குயின்ஸ்” ஞாபகார்த்த வலைப்பந்தாட்ட போட்டியில் யாழ் பல்கலைக்கழக அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியராக கடமையாற்றி முதன் முறையாக தேசிய ரீதியில் பதக்கத்தை கைப்பற்ற உறுதுணையாக இருந்த அமரர் ஜெ.ஜெயந்தி அவர்களின் ஞாபகார்த்தமாக

வடமாகாண கழகங்களுக்கு இடையிலான “ஜெயந்தி குயின்ஸ்” கிண்ணத்திற்கான வலைப்பந்தாட்ட போட்டியின் இறுதியாட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் யாழ் பல்கலைக்கழக அணியை எதிர்த்து வவுனியா யங்ஸ்ரார் அணி மோதியது. நான்கு கால் பகுதிகளாக நடைபெற்ற ஆட்டத்தில் ஆட்டம் ஆரம்பம் முதல் இறுதி வரை இரு அணிகளும் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் வகையில் விளையாடிக் கொண்டிருந்தனர். இதனால் இரு அணிகளுக்குமான புள்ளிகள் சம அளவில் அதிகரித்துக் கொண்டே சென்றது. 3வது கால் பகுதி ஆட்டம் நிறைவு பெற்றிருக்கையில் 21:20 என்ற ஒரு புள்ளி வித்தியாசத்தில் யாழ் பல்கலைக்கழக அணி முன்னிலை வகித்தனர். வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் நான்காவது கால் பகுதியாட்டம் இரு அணிகளுக்கும் சவாலாக அமைந்தது. இருப்பினும் ஆட்ட நேர முடிவில் யாழ் பல்கலைக்கழக அணி 32:27 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்