ஜனாதிபதி வேட்பாளர் விவகாரம்!! -ரணிலுக்கு ஒரு வார காலக்கெடு-
ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கு கட்சியின் செயற்குழுவையும், நாடாளுமன்றக்குழுவையும் ஒரே நேரத்தில் கூட்டுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இக் கோரிக்கையை நிறைவேற்ற ரணிலுக்கு ஒருவார கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஐ.தே.கவின் 55 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கூடிய மேற்படி கோரிக்கை கடிதத்தை கட்சியின் தவிசாளரான அமைச்சர் கபீர் ஹாசீமும், அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் இணைந்து அலரிமாளிகையில் வைத்து பிரதமரிடம் கையளித்தனர்.