ஜனாதிபதி வேட்பாளர்கள் தெரிவு போட்டியில் சஜித் பிரேமதாச முன்னணியில் உள்ளார்-ராஜித சேனாரத்ன
ஜனாதிபதி வேட்பாளர்கள் தெரிவு போட்டியில் ஐக்கிய தேசிய கட்சியின் துணைத்தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச முன்னணியில் உள்ளார் எனறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.
நேற்றைய தினம் ஷங்கரி-ல ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் பொழுதே இதனை ராஜித குறிப்பிடடார்.இதன் பொழுது அமைச்சர் சஜித் பிரேமதாசாவும் உடனிருந்தார். மேலும் குறிப்பிட்ட ராஜித சேனாரத்ன , தந்தையாரான ரணசிங்க பிரேமதாசாவின் கொள்கைகளை முன்னோக்கி கொண்டுசெல்வதில் சஜித் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டார்