Thu. May 21st, 2026

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச!! -சற்று முன் அறிவிப்பு-

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சிறிகொத்த ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று 3 மணி அளவில் கூடியது.

இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பெயர் ஜனாதிபதி வேட்பாளர் பதவிக்காக பரிந்துரைக்கப்பட்டது.

About The Author

Share This:

Leave a Reply

You may have missed