ஜனாதிபதி வேட்பாளராக சஜித்!! -ரணிலிடம் மீண்டும் வலியுறுத்த தயாராகும் எம்.பிக்கள்-

ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசாவை நியமிக்க வேண்டுமென பிரதமர் ரணிலிடம் மீண்டும் அழுத்தமான கோரிக்கை ஒன்றை முன்வைக்க ஐக்கிய தேசியக் கட்சி சஜித் ஆதரவு எம்.பிக்கள் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரதமர் மாலைதீவில் இருந்து நாடு திரும்பிய பின்னர் இந்த கோரிக்கையை முன்வைக்க ஏற்பாடாகியுள்ளது.
இதற்கிடையில் வேட்பாளராக சஜித்தை ரணில் பெயரிடாத பட்சத்தில் மாற்று ஏற்பாடொன்றை செய்வது குறித்தும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய அரசியல் கூட்டணி தொடர்பான சில விடயங்கள் அதன் அடிப்படையில் இப்போது பேசப்படுகின்றன.