Wed. Sep 18th, 2024

ஜனாதிபதி தேர்தல் நவம்பர் 16 இல் , நாளைமுதல் கட்டுப்பணம் செலுத்த முடியும், சூடு பிடிக்கும் தேர்தல் களம்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி சனிக்கிழமை நடைப்பெறும் என்றும் இதற்கமைய ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி தொடக்கம் ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே இதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று மாலை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
நாளைமுதல் அக்டோபர் மாதம் 6 ஆம் திகதி மதியம் 12 மணி வரை கட்டுப்பணத்தை செலுத்தமுடியும் என்றும் அக்டோபர் மாதம் 7 ஆம் திகதி காலை 9மணியில் இருந்து 11 மணிவரை வேட்பாளர் மனுத்தாக்கலை செய்யமுடியும் என்றும் தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது
இம் முறை ஜனாதிபதி தேர்தலில் மொத்தமாக 17 பேர் போட்டியிடவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய கட்சிகள் வேட்பாளரை அறிவித்தநிலையில் ஐக்கிய தேசிய கட்சி இன்னமும் அறிவிக்காமல் உள்ளது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்