ஜனாதிபதி தேர்தல்!! -கட்டுப்பணம் இன்று முதல்-
நாட்டின் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்ததை தொடர்ந்து, அதற்கான வர்த்தமானி அறிவித்தல் நள்ளிரவு வெளியிடப்பட்டது.
இந்நிலையில் தேர்தலுக்கான வேட்பாளர் மனுத் தாக்கல் ஒக்டோபர் 7 ஆம் திகதி இடம்பெறும் எனவும், அன்றைய தினம் காலை 9 மணி முதல் 11 மணி வரையான காலப் பகுதியில் வேட்பாளர் மனுத் தாக்கல் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், வேட்பாளர் கட்டுப்பணம் இன்று (19) முதல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை கையேற்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.